மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
49 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
49 days ago
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தென்னிந்தியத் திரையுலகத்தின், இந்தியத் திரையுலகத்தின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 2018ம் வருடம் துபாயில் அகால மரணமடைந்தார். இன்று அவருடைய 62வது பிறந்தநாள். அதை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார் அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். சென்னையில் நடைபெற்ற ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“1990-ல் சென்னையில் அவரது பிறந்தநாள் விழாவில், நான் அவருக்கு 26-வது பிறந்தநாள் வாழ்த்து கூறினேன், ஆனால் அது உண்மையில் அவரது 27-வது பிறந்தநாள். இது அவரை இளமையாக உணர வைக்கும் ஒரு புகழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் அவர் இளமையாகிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல விரும்பினேன். ஆனால், அவர், நான் கிண்டல் செய்கிறேன் என்று நினைத்தார்,” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
1990ல் ஸ்ரீதேவி, போனி கபூர் இருவரும் காதலர்களாகத்தான் இருந்துள்ளார்கள். 1987ல் 'மிஸ்டர் இந்தியா' படத்தின் படப்பிடிப்பில்தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அப்படத்தின் தயாரிப்பாளர்களில் போனி கபூரும் ஒருவர். பின்னர் இருவரும் 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு பெண் குழந்தைகள் பிறந்தது. இருவரும் தற்போது அம்மா வழியில் நடிப்புக்கு வந்துவிட்டனர்.
49 days ago
49 days ago