மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ'
ADDED : 52 days ago
ஹரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிக்கும் படம் 'நறுவீ'. அறிமுக இயக்குநர் சுபாரக் இயக்குகிறார். டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைத்துள்ளார். ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 29ஆம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் சுபாரக் கூறும்போது மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்றார்.