உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா

இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஹன்சிகா. 2022ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். இவர் ஹன்சிகா தோழியின் முன்னாள் கணவர் ஆவார். முதல் மனைவி உடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பின் ஹன்சிகாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் ஹன்சிகா சில படங்களில் நடித்தார். சமீபகாலமாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் தற்போது திருமண வாழ்விலும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கணவர் சோஹைல் கத்தூரியாவை பிரிந்து வாழும் ஹன்சிகா, இன்ஸ்டாவில் கணவருடன் இருந்த போட்டோக்களையும் நீக்கினார். கடந்தவாரம் ஆக., 9ல் தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாடினார்.

தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஹன்சிகா வெளியிட்ட பதிவில், ‛‛இந்தாண்டு வாழ்க்கை பல பாடங்களை கற்றுத் தந்தது. எனக்கே தெரியாமல் எனது பலத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் உங்களின் வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்தது, நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !