மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
49 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
49 days ago
மலையாளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 1983 என்கிற படத்தின் மூலம் நிவின்பாலி, இயக்குநர் அப்ரிட் ஷைன் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. அடுத்ததாக ஆக்ஷன் ஹீரோ பைஜூ என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தனர். அதன்பிறகு தான் மகாவீர்யர் படத்தில் இணைந்தனர். இந்த படம் தோல்வியாக அமைந்தது. இதில் நிவின்பாலியும் ஒரு தயாரிப்பாளராக இருந்ததால் படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் ஷாம்னாஸுக்கு நஷ்ட ஈடு இழப்பாக 95 லட்சம் தருவதாகவும், அடுத்து தானும் இயக்குனர் அபிரிட் ஷைனும் இணைந்து உருவாக்கும் ஆக்ஷன் ஹீரோ பைஜூ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரையும் ஒரு தயாரிப்பாளராக இணைத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்திருந்தாராம்..
அதை நம்பி அந்த இரண்டாம் பாகத்திற்கு 1.9 கோடி வரை பணத்தை செலவு செய்தாராம் ஷாம்னாஸ். அதுவரை நிவின்பாலியின் தயாரிப்பு நிறுவனமிடம் இருந்த அனைத்து பணிகளையும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் தான் அதற்கு முந்தைய ஒப்பந்தத்தின் படியே இந்த இரண்டாம் பாகத்திற்கான வெளிநாட்டு உரிமையை ஒருவரிடம் 5 கோடி விலை பேசி இரண்டு கோடி ரூபாய் முன்பணமும் வாங்கிவிட்டதாக ஷாம்னாஸுக்கு தெரிய வந்தது.
இது குறித்து நிவின்பாலி மற்றும் அப்ரிட் ஷைன் இருவருடனும் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்படவே அவர்கள் மீது புகார் அளித்துதிருந்தார். தயாரிப்பாளர் ஷாம்னாஸ். இந்த வழக்கு குறித்து நிவின்பாலி கூறும்போது, எங்களது பெயரை சீர்குலைக்கும் விதமாகவும் இப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்து சட்டரீதியாக எதிர்கொள்வோம். உண்மை நிச்சயமாக வெளிவரும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையை நிறுத்தி வைக்குமாறு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
49 days ago
49 days ago