உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது!


சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பிரபல மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கேரளாவில் இருந்த நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !