இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா
ADDED : 49 days ago
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தற்போது தமிழில் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
எந்த மாதிரி வேடங்களில் நடிப்பது தொடர்பாக இவர் கூறுகையில், ‛‛எனக்கு இப்போது 24 வயது தான் ஆகிறது. அதனால் காதல் மற்றும் காதல் கலந்த நகைச்சுவை தொடர்பான படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் மனநிலை இப்போது அப்படித்தான் உள்ளது.
இன்றைக்கு பெண்களை மையமாக கொண்ட படங்கள் அதிகம் வருகின்றன. இதுபோன்று பெண்களின் வலிமையான, ஊக்கமளிக்கும் கதைகளை பார்க்கும்போது எனக்கும் அதுபோன்ற ரோல்களில் நடிக்கும் ஆசை உள்ளது'' என்கிறார்.