கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி
ரஜினி நடித்துள்ள கூலி படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாகி உள்ள தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. ரஜினியுடன் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியா முழுக்க 5000 தியேட்டர்களில் வெளியாகி உள்ள கூலி படம் ரிலீஸ்க்கு முன்பே 100 கோடி வரை வசூலித்து இருந்தது.
மேலும், இன்று கூலி படம் திரைக்கு வந்துள்ள நிலையில் ரஜினியோ, பெங்களூர், பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள மடத்தில் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு தியானத்தில் ஈடுபட்டார். வெள்ளை நிற குர்தா, வேஷ்டி அணிந்து ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள நிர்வாகிகள் அவரை வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.