உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள்

ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடியபோதும், பொதுமக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 30 கோடி வரை வசூலித்துள்ளது. உலக அளவில் 151 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உடல் ஆரோக்கியம் குறித்த விஷயங்களை பேசினார் ரஜினி. இந்நிலையில் ஜிம்மில் ட்ரைனர் உதவியுடன் ரஜினி ஒர்க்-அவுட் செய்யும் ஒரு வீடியோ வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஷார்ட்ஸ், டி-ஷர்ட் அணிந்து ரஜினி ஒர்க் அவுட் செய்யும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !