அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை!
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‛3' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்ததால் முதல் படத்திலேயே பிரபலமாகி விட்டார் அனிருத். இந்நிலையில் தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர், சமீபகாலமாக தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் இசையமைத்து இந்திய அளவில் பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில் நேற்று ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த ‛கூலி' படத்திற்கும் இசையமைத்துள்ளார் அனிருத். இந்த படத்தை பார்ப்பதற்காக அனிருத்தின் தந்தையான நடிகர் ரவி ராகவேந்திரா தியேட்டருக்கு வந்தபோது, அவரிடத்தில் நிருபர்கள் அனிருத்துக்கு எப்போது திருமணம்? என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ‛‛எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் உங்களை தான் கேட்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவர் திருமணத்துக்கு என்னையும் கூப்பிடுங்கள்'' என்று கிண்டலாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.