உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா?

சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம், ஆகஸ்ட் 22ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை தயாரித்த விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் குடும்பத்தை சேர்ந்த அபு, சிலருடன் இணைந்து படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார். முதலில் படத்தின் பிலிம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். பின்னர், பல லட்சம் கொடுத்து 3 பட பிலிமை வாங்கி, அதை சில கோடி செலவழித்து நவீன முறையில் இன்ச் இன்ச் ஆக டிஜிட்டல் ஆக்கி ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

34 ஆண்டுகளுக்குமுன்பு கேப்டன் பிரபாகரன் ஹிட். இன்றைய இளைய தலைமுறைக்கு படம் குறித்து அதிகம் தெரியாது. ஆகவே படம் ஹிட்டாகும் என நம்புகிறார்கள். தவிர, இந்த படம் விஜயகாந்த்தின் பிறந்தநாளை 73வது பிறந்தநாளையொட்டி ரிலீஸ் ஆவதால், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதால், இதை தங்கள் கட்சிக்கு, தங்கள் அரசியல் பாதைக்கு பட ரிலீசை பயன்படுத்திக்கொள்ளவும் விஜயகாந்த் குடும்பம் நினைக்கிறதாம். பட ரிலீஸ் கொண்டாட்டங்களில் தேமுதிகவினரை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாம்.

சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன படங்களில் கில்லி மட்டுமே ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தது. சச்சின் பரவாயில்லை ரகம். பில்லா, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் தேறவில்லை. கேப்டன் பிரபாகரனுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !