‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ADDED : 48 days ago
‛சாஹோ' பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி'. பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து பிரியங்கா மோகனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரியங்கா மோகன், கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.