உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா

எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா

தலைவன் தலைவி படம் இன்று 25 நாட்களை தொட்டுள்ளது. இதுவரை 100 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள். கடந்த சனிக்கிழமை இந்த படத்தில் வெற்றி விழா, சென்னை நட்சத்திர ஓட்டலில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. இயக்குனர் பாண்டிராஜ், ஹீரோ விஜய் சேதுபதி, காமெடியன் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஏனோ ஹீரோயின் நித்யா மேனன் வரவில்லை. மகாராஜா படத்தின் வெற்றி விழாவை மீடியாக்களை கூப்பிட்டு விமர்சையாக நடத்தினார் விஜய் சேதுபதி. ஆனால், சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சிக்கு மீடியாக்களுக்கு அழைப்பில்லை. ஆனாலும், ஏஸ் பட தோல்வியால் கவலையில் இருந்த விஜய் சேதுபதிக்கு தலைவன் தலைவி வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் டிரைன், புரிஜெகன்நாத் படம், காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !