மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
46 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
46 days ago
இந்தியத் திரையுலகத்தில் இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக 'மகா அவதார் நரசிம்மா' படம் அமைந்துள்ளது. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இவ்வளவு குறைந்த பட்ஜெட், பெரிய லாபம் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
300, 400 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட சில படங்கள் அதில் பாதியளவு கூட வசூலிக்காத நிலையில் இந்தப் படத்தின் வெற்றி இந்தியத் திரையுலகில் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 7வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் 800 கோடியுடன் 'ச்சாவா' ஹிந்திப் படம், இரண்டாவது இடத்தில் 550 கோடியுடன் 'சாயரா' ஹிந்திப் படம், மூன்றாவது இடத்தில் 400 கோடியுடன் ‛கூலி' தமிழ்ப் படம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் தந்த வெற்றியால் இது போன்று பல ஆன்மிகப் படங்கள் வருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது.
46 days ago
46 days ago