அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி
ADDED : 47 days ago
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1, 2 ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது பாலாஜி மோகன் காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வெப் தொடரில் கதாநாயகனாக அர்ஜூன் தாஸ் நடித்து வருகிறார் என தகவல் வெளியானது. இப்போது இதில் கதாநாயகியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார் என்கிறார்கள். இவர் ஏற்கனவே தமிழில் ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2, தக் லைப் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.