உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது!

வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது!


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பஹத் பாசில் இணைந்து நடித்த ‛மாமன்னன்' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‛மாரீசன்' படத்திற்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகி இருந்த இந்த படத்தில் வடிவேலு சீரியசான வேடத்திலும், பஹத் பாசில் காமெடி கலந்த வேடத்திலும் நடித்திருந்தார். என்றாலும் இந்த படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் மாரீசன் படம் ஆகஸ்ட் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மாரீசனுக்கு தியேட்டரில் கிடைக்காத வவேற்பு ஓடிடியிலாவது கிடைக்குமா? என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !