இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி!
நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு விவாகரத்து கோரி குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மாறி மாறி சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியிட்டு மோதிக்கொண்டபோது அதற்கு நீதிமன்றம் தடைபோட்டது. மேலும், நடிகர் ரவி மோகன் தன்னை பிரிந்த பிறகு சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்த ஆர்த்தி ரவி, தனது இளைய மகன் அயானின் பிறந்த நாளின் போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் தான் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு நடிகர் தனுஷின் அக்கா டாக்டர் கார்த்திகா, அழகி என்று சொல்லி பயர் எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை அவர் பதிவிட்ட மூன்று மணி நேரத்திலேயே 50 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது.