உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா

எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா


மலையாள நடிகை சம்யுக்தா தமிழில் ‛களரி' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு தனுஷ் நடித்த ‛வாத்தி' படத்தில் நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‛பென்ஸ்' மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சம்யுக்தா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ‛‛எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்றாலும் தினமும் அதை குடிப்பதில்லை. அதிகப்படியான மன அழுத்தமோ பதட்டமோ ஏற்படும் போது மட்டுமே குடிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் நடிகர், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் தங்களுக்கு இருந்தாலும் அதை வெளிகாட்டினால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று அதை மறைக்கத்தான் முயல்வார்கள். ஆனால் சம்யுக்தா இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !