உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப்

அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப்


ரஜினியின் ‛கூலி' படம் வெளியாகி, ரிசல்ட்டை தந்துவிட்டதால், இதுவரை பதுங்கியிருந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. ஆகஸ்ட் 22ம் தேதி விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் (ரீ ரிலீஸ்), வசந்த் ரவி நடித்த 'இந்திரா' படங்களும், ஆகஸ்ட் 29ல் ‛சொட்டசொட்ட நனையுது, குற்றம்புதிது, கடுக்கா' ஆகிய சின்ன பட்ஜெட் படங்களும் செப்டம்பர் 5ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி', கேபிஒய் பாலா நடிக்கும் ‛காந்திகண்ணாடி',வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கிய ‛பேட் கேர்ள்', சோனியா அகர்வால் நடித்த ‛கிப்ட்' படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

செப்டம்பர் 19ல் கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‛தண்டகாரண்யம்', கவின் நடிக்கும் ‛கிஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவை தவிர சில சின்ன பட்ஜெட் படங்களும் வெளிவர தயாராகின்றன. இந்த படங்களில் இந்தாண்டு இதுவரை ரிலீஸ் தேதி முடிவானதில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி' மட்டுமே பெரிய பட்ஜெட் படம், பெரிய ஸ்டார் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !