உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்?

மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்?

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. நீண்டகால நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல்தான் அந்த பரபரப்புக்குக் காரணம்.

'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனையும், 'கூலி' படத்தில் ரஜினிகாந்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், அவர்கள் இருவரையும் இணைத்து நடிக்க வைத்து இயக்கப் போகிறாராம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஒரு தகவல். இந்தப் படத்தை கமல்ஹாசன் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கப் போகிறாராம்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் இயக்க ஒரு படம் உருவாகும் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு தகவல் வந்தது. ஆனால், அது நடக்கவில்லை. பின்னர்தான் கமல் நடிக்க 'விக்ரம்' படத்தை இயக்கினார் லோகேஷ்.

கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தைத்தான் அடுத்து லோகேஷ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. தற்போது அந்தத் தயாரிப்பாளரிடம் பேசி படத்தைத் தள்ளி வைத்துள்ளதாகவும், அதற்கு முன்பு ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

திகழும் ஓவியன்,Ajax Ontario
2025-08-20 12:15:03

குறளி வித்தை...


நிவேதா, Dindigul
2025-08-20 07:24:43

அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காலத்தில், கமலுக்கு அடுத்து ரஜினி என்ற நிலை இருந்தது. இன்று ரஜினிக்கு அடுத்து உள்ள பல நடிகர்களில் ஒருவர் கமல் என்ற நிலை உருவாகி விட்டது. எதற்கு இந்த விஷப்பரீட்சை?


கத்தரிக்காய் வியாபாரி, coimbatore
2025-08-19 13:18:13

இயக்குனரை சுதந்திரமா படம் எடுக்க விடுங்க மொதல்ல.