உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி

நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, கடந்தவாரம் வெளியான படம் ‛கூலி'. அவருடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாகிர், ஹிந்தி நடிகர் அமீர்கான், தமிழில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கன்னட நடிகை ரச்சிதா ராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக பெரிய படங்களை குறி வைத்து தாக்கப்படும் விமர்சனத்திற்கு இந்த படமும் தப்பவில்லை. அதேசமயம் படம் வெளியாகி முதல்நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலித்தது. அதன்பின் வசூல் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 4 நாளில் இப்படம் ரூ.404 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரநாட்கள் என்பதால் இனி வசூல் குறைவாகவே இருக்கும். அடுத்த சனி, ஞாயிறுக்கு படத்தின் வசூல் கொஞ்சம் அதிகமாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஆதிநாராயணன்
2025-08-19 15:18:58

இந்த படத்தை விமர்சிப்பவர்கள் அவர்களின் மனசாட்சிக்கு விரோதமானவர்கள் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டுமோ அத்தனையும் உள்ளது