உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2'

ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2'

தெலுங்கு நடிகர்கள் சிலர் பான் இந்தியா படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானதால் அவர்களை நேரடி ஹிந்திப் படங்களில் நடிக்க வைக்க சில ஹிந்தி இயக்குனர்கள் ஆர்வம் காட்டினார்கள். அப்படி 'வார் 2' படத்தில் நடிக்கப் போனவர்தான் ஜுனியர் என்டிஆர். இந்தப் படம் மூலம் இன்னும் பிரபலமாகலாம் என நினைத்து நடித்த ஜுனியர் என்டிஆருக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தாலும், அந்தப் படத்தை நேரடி தெலுங்குப் படம் போலவே தனி கவனம் செலுத்தி நடித்தார் என்டிஆர். அதோடு படத்திற்காக ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியையும் நடத்தினார்கள். ஆனால், படம் வெளிவந்த பின் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமல் போனது. ஹிந்தி இயக்குனர்களை நம்பி தெலுங்கு நடிகர்கள் போக வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்யும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது.

தொடர்ந்து 10 வருடங்களாக வெற்றிப் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜுனியர் என்டிஆருக்கு இந்த 'வார் 2' படம் அந்தத் தொடர் வெற்றியைப் பறித்துவிட்டது. இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2025-08-20 10:03:59

இனி சினிமா விமர்சனம் செய்யாதே தயவு செஞ்சி