'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா?
தமிழ் சினிமா உலகில் 600 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்றால் மூன்றே மூன்று படங்கள்தான் உள்ளன. 2018ம் ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் முதன் முதலில் 600 கோடி வசூலைக் கடந்த படம். அப்படத்தின் மொத்த வசூல் 800 கோடி இருக்கும் என்பது தகவல். அந்த வசூல் சாதனை கடந்த ஏழு வருடங்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது.
'2.0' படத்திற்குப் பிறகு 2023ல் வெளிவந்த 'ஜெயிலர், லியோ' ஆகிய படங்கள் 600 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. படம் வெளிவருவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூலை பெறப் போகும் முதல் படம் 'கூலி' என சிலர் பேசினார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. குறைந்தபட்சம் 'ஜெயிலர், லியோ' படங்களின் 600 கோடி வசூலை மிஞ்சினால் அதுவே சாதனையாக அமையும்.
'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் இல்லாமல் இருந்திருந்தால் அதன் வசூல் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது தியேட்டர் வட்டாரத் தகவலாக உள்ளது. தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் 'யுஏ' சான்றிதழ் பெறுமளவிற்காவது முயற்சித்திருக்க வேண்டும் என தியேட்டர் வட்டாரங்களில் குறையாகச் சொல்கிறார்கள்.