உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி

'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி


ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படம் 1991ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த இப்படம், விஜயகாந்தின் 100வது படமாகும். தற்போது இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிற 22ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனை மிகவும் கொடூர வில்லனாக சித்தரித்திருந்தாகவும், அவரை பற்றி தவறான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தாகவும் அதனால் இந்த படத்தை மறு வெளியீடு செய்யக்கூடாது என்று சில அமைப்புகள் கூறிவருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்.கே.செல்வமணி நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: கேப்டன் பிரபாகரன் படத்திற்காக வீரப்பனை நேரடியாக சந்தித்து பேசினேன். அவரிடம் உள்ள கூர்நோக்கும் திறன் என்னை வியக்க வைத்தது. தூரத்தில் மனித நடமாட்டம் இருந்தாலும், பறவை-விலங்குகளின் நடவடிக்கை மூலமாக அதை அறிவார்.

சுய ஒழுக்கத்தில் உச்சமாக இருந்தார். காவல் தெய்வமாக கிராமத்து மக்களை பாதுகாத்தார். தன் ஆட்களாக இருந்தாலும், கிராமத்து பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களை தண்டித்துள்ளார். வீரப்பன் சுமார் 30 ஆயிரம் டன் சந்தன மரங்களை வெட்டியுள்ளார். இதெல்லாம் எங்கே போனது? வெளியே இருப்போரின் வலதுகரமாகவே வீரப்பன் செயல்பட்டுள்ளார். அவரை இயக்கிய மூளை வெளியேதான் இருந்துள்ளது.

எந்த பெண்ணையும் வீரப்பன் தொட்டது கிடையாது. கெட்டவனாக நினைத்திருக்கும் வீரப்பனின் நல்ல குணத்தை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து நான் வடிவமைத்தேன். வீரப்பன் உயிருடன் பிடிபட்டிருந்தால் பல குற்றவாளிகள் மாட்டியிருப்பார்கள். அவரை உயிருடன் பிடித்திருக்க முடியாது என்ற அடிப்படையில் காட்சிகள் வைத்தேன். அதுதான் உண்மையில் நடந்தது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன், வேலந்தாவளம்
2025-08-19 18:31:24

நீ அடிச்சு உடு ராசா.. confirm பண்ண வீரப்பன் தான் இல்லையே... உன் வாய் உன் உருட்டு...