வாசகர்கள் கருத்துகள் (1)
KayD, Mississauga
2025-08-20 19:27:12
பல் இருக்கிறவன் பகோடா தின்றான் ..
‛லெஜண்ட்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜவுளிக்கடை அதிபரான சரவணன். முதல் படத்தில் அவர் சந்தித்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதேசமயம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சரவணன் ‛கேங்ஸ்டர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல் இருக்கிறவன் பகோடா தின்றான் ..