உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு

அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த ரவி நடித்த இந்திரா படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஒரு கண் பார்வையற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை என்று கூறப்படுகிறது. அந்த சீரியல் கில்லராக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார்.

ஆனால் படக்குழுவோ 'இது மட்டுமே கதை இல்லை. திரில்லர் கதை என்பதால் ஹீரோ, வில்லன் கேரக்டரில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் இருக்கிறது. இன்னும் சில கேரக்டர் இருக்கலாம். ஆகவே படம் பார்ப்பவர்கள் முக்கியமான விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். விமர்சனங்களில் சஸ்பென்ஸ் விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்' என்கிறது.

ஹீரோயின் மெஹ்ரீனும் ‛என் கேரக்டர் பற்றி விரிவாக பேச முடியாது. அதில் கதை ஒளிந்து இருக்கிறது' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !