உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'மதராஸி'. தொடர் தோல்விகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர மலையாள நடிகர் பிஜு மேனன், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

மதராஸி என்பது தமிழர்களை வட இந்தியர்கள் அழைக்கும் சொல். படத்தின் வில்லன் வட இந்தியரான வித்யூத் ஜமால் இதை வைத்துக் கொண்டு இது வட இந்திய வில்லனுக்கும், தமிழ் இளைஞனுக்குமான மோதல் கதை என தகவல்கள் பரவி வரும் நிலையில், படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:

6 மாதத்திற்கு முன்பே உருவான கதையை சிவகார்த்திகேயனுக்காக மதராஸியாக மாற்றினேன். சென்னைதான் படத்தின் கதை களம். படத்தின் வில்லன் வட இந்தியாவை சேர்ந்தவர். இந்த கேரக்டரில் வித்யூத் ஜம்வால் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் இப்போது அங்கு ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார். அதனால் அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் நான் அழைத்த உடன் சென்னை வந்து இறங்கி விட்டார்.
ஒரு வட இந்தியரின் பார்வையில்தான் கதை பயணிக்கும், சிவா வழக்கமான இளைஞர்களிலிருந்து மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை. இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன் ஒரு நாயகியை தேடியபோது கன்னடத்தில் நடித்த ருக்மணி வசந்த் என்னோட நாயகி மாலதியாக தெரிந்தார். அவரையே நாயகியாக்கி விட்டோம். இப்போது புதிதாக முளைத்திருக்கும் ஒரு ஆபத்தை பற்றி படம் பேசுகிறது. அந்த ஆபத்து நாளை நமக்கு வரலாம் என்று எச்சரிக்கை செய்யும் படமாகவும் இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Mani . V, Singapore
2025-08-27 06:44:06

சில தறுதலைகள் நசுக்குறாங்க அப்படின்னு சொல்லி ஜாதி மோதலைத் தூண்டும் படங்களை எடுக்கிறான்கள். நீ அவர்களுக்கும் மேலாக நாட்டுக்குள் மோதலை உருவாக்கும் படத்தை எடுக்கிறாய். எப்படியோ நாட்டை நாசமாக்கினால் சரி.