உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2'

300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2'

ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'வார் 2'. இப்படத்தைத் தெலுங்கு, தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழில் இந்தப் படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஜுனியர் என்டிஆர் நடித்ததால் தெலுங்கில் ஓரளவு பார்க்கப்பட்டது. இருந்தாலும் அங்கு 60 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்தது. அங்கு இன்னும் 50 கோடி வசூலித்தால்தான் படம் லாபத்தைப் பெற முடியும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் மொத்தமாக 300 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளது. ஆனாலும், இன்னும் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால்தான் படம் லாபத்தை அடையும் என்கிறார்கள். ஜுனியர் என்டிஆரின் பத்து வருட தொடர் வெற்றியை இந்தப் படம் நிறுத்திவிட்டது. இதனால், அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இனி, ஹிந்திப் படங்களில் ஜுனியர் என்டிஆர் நடிக்கவே கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

பவன் கல்யாண், விஜய் தேவரகொன்டா, ஜுனியர் என்டிஆர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் தெலுங்கில் தோல்வியைத் தழுவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

முருகன்
2025-08-22 19:19:07

வார் 2க்கு நஷ்டம் நஷ்டம் என செய்திகள் வரும் கூலிக்கு மட்டும் கோடி கோடியாக வசூல் என செய்திகள் வரும்


angbu ganesh, chennai
2025-08-23 10:11:40

உன்ன மாதிரி இருக்கறவனுங்களைத்தான் நாடு நம்பும் பொய் சொல்ற குடும்பத்தை சேர்ந்தவன்தானே நீ