வாசகர்கள் கருத்துகள் (2)
Annan valiyil thambi selvar.. In all terms..
அனுப்புநர் உங்க தொம்பி விஜய் தானே. பதில் கடிதம் எழுத அவர் விலாசம் கூடவா தெரியவில்லை.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. அப்போது திமுக, பாஜக, அதிமுக என அத்தனை கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்டாலின் அங்கிள் வெரி ராங் அங்கிள் என்றெல்லாம் பேசினார். மேலும் சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். மார்க்கெட் இறங்கிய பிறகு வரவில்லை என்றும் பேசினார். நடிகர் கமல்ஹாசனை தான் விஜய் இப்படி பேசி இருக்கிறார் என்று கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் அது குறித்து மீடியாக்கள் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டபோது, விஜய் பேசும்போது எந்த இடத்திலும் என்னுடைய பெயரை கூறவில்லை. அப்படி இருக்கும்போது அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் ஏன் பதில் போட வேண்டும். விஜய் எனக்கு தம்பி என்று பதில் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
Annan valiyil thambi selvar.. In all terms..
அனுப்புநர் உங்க தொம்பி விஜய் தானே. பதில் கடிதம் எழுத அவர் விலாசம் கூடவா தெரியவில்லை.