கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி
ADDED : 90 days ago
அறிவழகன் இயக்கத்தில் ஈரம் படத்தில் நடித்த ஆதி, கடைசியாக மீண்டும் அவர் இயக்கத்தில் சப்தம் என்ற படத்தில் நடித்தார். அவருடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. அதையடுத்து தெலுங்கில் அகாண்டா 2, தாண்டவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் மார்ஷல் என்ற படத்தில் வில்லனாக கமிட்டாகியுள்ளார் ஆதி. ராகவா லாரன்சின் பென்ஸ் படத்தில் வில்லனாக நடித்து வரும் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அவரது கால்சீட் இல்லாததால் தற்போது ஆதியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.