வாசகர்கள் கருத்துகள் (1)
அது எல்லாம் ஓகே.. இப்போ மதராஸி நாங்க பேசற மாதிரி இருக்குமா இல்லை வழக்கம் போல நீ மட்டும் தான் பேசுவியா
தமிழ் சினிமாவில் நடிகர் கமல் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் ஏ.ஆர் முருகதாஸ். தற்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக விஜய், அஜித் என்கிற இரண்டு பேருடனும் இணைந்த இவர் பணியாற்றியுள்ளதால் இவர்கள் இருவர் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி சமீபத்திய ஒரு பேட்டியின்போது விஜய் பற்றி அஜித்தும், அஜித் பற்றி விஜய்யும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு ஏ.ஆர் முருகதாஸ் பதில் அளிக்கும்போது, “விஜய்யை பொருத்தவரை என்னிடம் சினிமா சம்பந்தமாக பேசுவாரே தவிர மற்ற எந்த நடிகர்களையும் பற்றி அவர் ஒருபோதும் பேச மாட்டார். அதேபோல அஜித் என்னிடம் பேசும்போது சினிமா பற்றி கூட பேசவே மாட்டார். சினிமாவை தவிர மற்ற எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதேசமயம் ரஜினி சாருடன் பணியாற்றிய போது அவருடன் பேசினால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கமல் மற்றும் பாலச்சந்தர் இவர்கள் இருவர் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்” என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ்.
அது எல்லாம் ஓகே.. இப்போ மதராஸி நாங்க பேசற மாதிரி இருக்குமா இல்லை வழக்கம் போல நீ மட்டும் தான் பேசுவியா