உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன்

இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன்

பிரேமம் படம் மூலம் புகழ்பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ள பர்தா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பிரவீன் கன்ட்ரேகுலா என்பவர் இயக்கியுள்ளார். அனுபமா தவிர இன்னொரு கதாநாயகியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளார். இவர் ஹிருதயம், ஜெயஜெய ஜெயஜெய ஹே உள்ளிட்ட படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தவர். பர்தா படம் மூலம் தெலுங்கில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் தர்ஷனா ராஜேந்திரனுடன் நடித்தது பற்றி கூறும்போது, “இயக்குனர் என்னிடம் இந்த கதையை சொன்னபோது இன்னொரு கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவர் தர்ஷனா ராஜேந்திரனின் பெயரை சொன்னார். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. காரணம் இந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்பாரா, அதுவும் இல்லாமல் இது தெலுங்கில் முதல் படம்.. அதனால் சான்ஸே இல்லை என்று நினைத்தேன்.

ஆனாலும் தர்ஷனா இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும், அவரை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. அவர் இந்த படத்தில் எப்படியாவது ஒப்பந்தமாகிவிட வேண்டும் என்பதற்காக பிளாக் மேஜிக், பூஜை, பிரார்த்தனை எல்லாம் செய்தேன். என் பிரார்த்தனையின் பலனாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்” என்று ஜாலியாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !