உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா

ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா

கன்னட சினிமாவில் கடவுள் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக கடந்த மாதத்தில் வெளியான படம் 'மகாவதார் நரசிம்மா'. முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அஸ்வின் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

வெளியானது முதலே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்தப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இப்படம் உலகளவில் ரூ.278 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் இந்த படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை எட்டும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இந்திய அனிமேஷன் படங்களின் வசூலில் இது தான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Ranjani
2025-08-24 02:13:50

சந்தோஷமாக இருக்கிறது