‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ADDED : 45 days ago
தெலுங்கில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படமாக ' ஆந்திரா கிங் தாலுக்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இதற்கு விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிறப்பு தோற்றத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற நவம்பர் 28ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.