சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா
ஹிந்தியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் ராகினி எம்எம்எஸ். தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 2014ல் வெளியானது. வினய் யெனகண்டுலா என்பவர் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்த ராகினி எம்எம்எஸ் படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இது குறித்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்நாத் கபூர் தெரிவித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையில் இந்த படம் உருவாகிறது.
மேலும் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் சன்னி லியோன் கவர்ச்சியான பாடலுக்கு நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதேபோன்று இந்த மூன்றாம் பாகத்தில் தமன்னாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும் பாலிவுட் தகவல் தெரிவிக்கிறது. மேலும் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.