நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி
ADDED : 155 days ago
தன்னுடன் நடித்த கேரளத்து அம்மணியை காதலித்து, வீட்டுக்கார அம்மணி ஆக்கி கெண்டார், கடல் நடிகர். இருப்பினும், ஏற்கனவே தான் பழகிய சில ரகசிய சிநேகிதிகளுடன், 'வீக் எண்ட் பார்ட்டி'களில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்திருக்கிறார்.
இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கார அம்மணிக்கு தெரியவந்ததை அடுத்து, அதற்கு தடைக்கல் போட்டு விட்டார். 'கண்டிப்பாக, 'வீக் எண்ட்'டில் சரக்கு அடித்தே ஆக வேண்டுமென்றால், அதற்கு நானே கம்பெனி கொடுக்கிறேன். 'பார்ட்டி'யை வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாம்...' என, கடல் நடிகருக்கு கடிவாளம் போட்டுள்ளார், ஆத்துக்கார அம்மணி.