உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு

'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு


பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜுலை 25ம் தேதி வெளியான படம் 'தலைவன் தலைவி'. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், படம் வசூலில் சிறப்பாக இருந்தது.

தற்போது படம் 100 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் 25 கோடி, ஒரு வாரத்தில் 50 கோடி, 11 நாட்களில் 75 கோடி வசூலித்திருந்தது. இப்போது ஒரு மாதத்திற்குள்ளாக 100 கோடியை வசூலித்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு 'மகாராஜா' படத்திற்குப் பிறகு இந்தப் படம் 100 கோடி படமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களில் 6வது 100 கோடி படம் இது. “கூலி, குட் பேட் அக்லி, ரெட்ரோ, டிராகன், விடாமுயற்சி' ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !