63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா!
ADDED : 45 days ago
1978ல் பாரதிராஜா இயக்கிய ‛கிழக்கே போகும் ரயில்' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் ராதிகா. அதன் பிறகு ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர், சமீப காலமாக அம்மா வேடம் மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 21ம் தேதி ராதிகா சரத்குமார் தன்னுடைய 63வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவரது இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மீனா, திரிஷா, மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளார்கள். இது குறித்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.