உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது!

சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மதராஸி'. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது. இன்று டிரைலர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த மதராஸி படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

மேலும் தற்போது இந்த படத்தின் திரையரங்க உரிமையை 40 கோடி ரூபாய்க்கு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் வாங்கி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களை போன்று தற்போது சிவகார்த்திகேயன் படங்களின் தியேட்டர் உரிமையினையும் பெரிய தொகை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்க தொடங்கி இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !