உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது!

ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள ‛கூலி' படம் 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரைக்கு வந்த அந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதோடு, சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நான்கு நாட்கள் பெரிய அளவில் வசூலித்து வந்த கூலி படம், அதன் பிறகு வசூலில் பின்தங்கியது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த இந்த கூலி படம் பத்து நாட்களில் 465 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரஜினியின் கூலி படம் 500 கோடியை எட்டி பிடிக்குமா என்பதே சந்தேகமாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !