உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா

இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் இன்றும் கூட இளம் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் பிஸியாக நடித்து வருவதுடன் இந்த வயதிலும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. பாலைய்யா என்று திரையுலகினராலும் அவரது ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா, தனது இந்த 65 வயதில் 50 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார். 1974ல் சினிமாவில் தன்னுடைய தந்தை படத்திலேயே இவர் அறிமுகமானார்.

இந்த நிலையில் இவரது 50 வருட திரையுலக பயணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இவர் பெயரும் தற்போது இடம் பிடித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு நடிகரும் இவரே.

இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிஇஓ சந்தோஷ் சுக்லா கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் ஐந்து தலைமுறைக்கான நீண்ட பங்களிப்பை தந்து லட்சக்கணக்கானோருக்கான இன்ஸ்பிரேஷனாக பாலகிருஷ்ணா இருக்கிறார். அவரது இந்த பயணம் என்பது இந்திய மற்றும் குளோபல் சினிமாவில் ஒரு தங்க முத்திரையாக பதிந்துள்ளது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !