உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது

சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த குஷி படத்திற்கு பிறகு வெப்சீரிஸ்களில் நடித்து வரும் சமந்தா, தான் தயாரித்த சுபம் என்ற தெலுங்கு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தன்னை வைத்து ‛ஓ பேபி' என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கும் மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சமந்தா.

1980களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தையும் சுபம் படத்தை அடுத்து தனது டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சமந்தாவே தயாரிக்கப் போகிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !