மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு
ADDED : 45 days ago
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் நிறைய படங்கள் வந்துள்ளன. குறிப்பாக காதலன், மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல படங்களில் இவர்களின் காமெடி ரசிகர்களை இன்றளவும் ரசிக்க வைக்கிறது. ஒருகட்டத்திற்கு பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. அவ்வப்போது சினிமா தொடர்பான விழாக்களில் சந்தித்து கொள்வர்.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகின்றனர். இதை சாம் ரோட்ரிக்ஸ் என்பவர் இயக்குகிறார். யுவன் இசையமைக்கிறார். ஜோம்பி தொடர்பான கதையில் இப்படம் உருவாகிறதாம். இந்த படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது.