அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள்
ரஜினிகாந்த் அடுத்த படம் ‛ஜெயிலர் 2'. இந்த ஆண்டு இறுதிகள் படப்பிடிப்பு முடிந்துவிடும். அடுத்த ஆண்டு ரிலீஸ் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் உறுதியான முடிவை எடுக்கவில்லை. ‛கல்கி ஏடி.2898' படத்தை எடுத்த நாக் அஸ்வின், லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்டோர் அவர் மனதில் இருக்கிறார்கள். விரைவில் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்.
‛தக்லைப்' தோல்வி காரணமாக இன்னமும் அடுத்த படத்தை கமல்ஹாசன் தொடங்கவில்லை. ‛இந்தியன் 3' பெண்டிங்கில் இருக்கிறது. பைட்மாஸடர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். ஆனாலும், முறைப்படி அடுத்த படத்தை கமல்ஹாசன் இன்னமும் தொடங்கிவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டாலும் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவில்லை. செப்டம்பர் 5ல் சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி' ரிலீஸ். பொங்கலுக்கு ‛பராசக்தி' வெளியாகிறது. அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ‛டான்' சிபி சக்ரவர்த்தி, ‛குட்நைட்' விநாயகன், வெங்கட் பிரபு ஆகியோர் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், இதுவரை யாருக்கு அடுத்த கால்ஷீட் என சிவகார்த்திகேயன் சொல்லவில்லை.
சூர்யா நடித்த ‛கருப்பு' பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு. அடுத்து வெங்கி இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதற்கடுத்த படத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. சிம்புவின் அடுத்த படம் ‛வட சென்னை 2' என்றாலும், ஏனோ படத்தின் பூஜை போடப்படவில்லை. புரி ஜெகன்நாதன், பாலாஜி தரணிதரன் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியும் அதற்கடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லையாம்.
தனுஷ் நடித்த ‛இட்லி கடை' அக்டோபரில் வெளியாக உள்ளது. அடுத்து ‛போர்தொழில்' இயக்குனர் விக்னேஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படங்களில் நடிக்கப்போகிறார் தனுஷ். அடுத்து அவரை வைத்து படம் இயக்க பலர் வரிசையில் நிற்கிறார்கள்.