உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர்

டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர்

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது வெளியீட்டில் அடுத்து வெளியாக இருக்கும் ‛சின்ட்லர்ஸ் செல் ; டெத் வாட்ச்' வெப் சீரிஸ் குறித்து டீசரை சமீபத்தில் வெளியிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இதில் பயன்படுத்தப்பட்ட பின்னணி இசையை கேட்டதும் இது பஹத் பாசில் நடித்த ‛ஆவேசம்' படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே இசை தான் என்று கமெண்ட் போட துவங்கினர்.

இந்த டீசர் ஆவேசம் படத்தின் இசையமைப்பாளர் சுசின் ஷியாம் கவனத்திற்கும் சென்றது. இதை பார்த்துவிட்டு, “என்னுடைய ட்ராக்கை பயன்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நெட்பிளிக்ஸ். என்ன, என்னுடைய பெயரையும் டைட்டில் கார்டில் சேர்த்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்” என்று கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். ‛மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், மின்னல் முரளி' உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு சுசின் ஷியாம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !