உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு

புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு


'மன்னு க்யா கரேகா' எனும் ரொமான்டிக் காமெடி மியூசிக்கல் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. புகழ்பெற்ற பாடகர்களான உதித் நாராயண் மற்றும் ஷான் ஆகியோர் தங்கள் மெல்லிசைக் குரல்களால் அனைவரையும் மயக்கினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

க்யூரியஸ் ஐஸ் சினிமா நிறுவனத்தின் சார்பில் ஷரத் மெஹ்ரா தயாரிக்க, சஞ்சய் திரிபாதி இயக்கியுள்ள இந்த படத்தில், வியோம் மற்றும் சாசி பிந்த்ரா, நாயகன் - நாயகியாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி படத்தில் ஒர்க்அவுட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் வினய் பதக், குமுத் மிஸ்ரா, சாரு சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புத்துணர்ச்சியான, வண்ணமயமான காட்சிகளுடன் துவங்கிய டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளது. பழைய கால காதலின் இனிமையை இளம் தலைமுறையின் பார்வையில் காண்பிக்கும் விதமாக காட்சிப்படுத்தியுள்ளனர். குடும்பப்பாங்கான, உணர்ச்சியுள்ள காட்சிகள், முதல் காதல் நினைவுகள் எனு கலந்த வகையில் டிரைலர் அமைந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !