பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம்
மலையாளத்தில் கடந்த வெள்ளியன்று பிரித்விராஜ் நடித்த விலாயத் புத்தா திரைப்படம் வெளியானது. சந்தன மர வியாபாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள ஈகோ ஆகியவற்றை மையமாக வைத்து பிரம்மாண்டமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடன் எக்கோ என்கிற சிறிய பட்ஜெட் படமும் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் டிஞ்சித் அய்யத்தான் என்பவர் இயக்கத்தில் ஹோம், ஆலப்புழா ஜிமகானா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சந்திப் பிரதீப் கதாநாயகனாக நடித்து, குறைந்த பட்ஜெட்டில் வெளியான எக்கோ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
முதல் நாள் சாதாரண அளவிலேயே வசூலை பெற்ற இந்த படம் மவுத் டாக் மூலமாக பிக்கப் ஆகி சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அதிக அளவு காட்சிகளை பெற்றது, குறிப்பாக விலாயத் புத்தா திரைப்படம் மூன்று நாட்களில் 3.5 கோடி வசூலித்த நிலையில் இந்தப்படம் 5.8 கோடி வசூலித்துள்ளது வரும் நாட்களில் இந்த படத்திற்கான வரவேற்பும் வசூலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது