நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு
ADDED : 1 hours ago
நாக சைதன்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தண்டேல் திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இப்போது கார்த்திக் தண்டு என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் நாக சைதன்யா. இந்த படத்தின் கதையை இயக்குனர் சுகுமார் எழுதியுள்ளார். கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது இந்த படத்திற்கு விருஷகர்மா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மகேஷ்பாபு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு நாக சைதன்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் விருஷகர்மா என்கிற டைட்டில் மிகவும் கம்பீரமாக இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.