மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
ADDED : 45 days ago
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ‛ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டைட்டில் க்ளிம்ஸ் வெளியானதைத் தொடர்ந்து இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் விஷால் இந்த படத்தில் மூன்று தோற்றங்களில் தோன்றுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.