‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண்
ADDED : 354 days ago
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சி பாபு சனா டைரக்ஷனில் உருவாகி வரும் படம் ‛பெத்தி'. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2026 மார்ச் 27ம் தேதி படம் வெளியாகும் என முன்கூட்டியே அறிவித்து விட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு சீராக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு பாடல் காட்சி ஒன்று மைசூரில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார். ராம்சரண் உடன் இணைந்து ஆயிரம் டான்ஸர்கள் இதில் பங்கேற்று ஆடியுள்ளனர். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் படத்தில் ஹைலைட்டாக பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.