வாசகர்கள் கருத்துகள் (2)
இதுலேயும் பினாமியா? உங்க அக்கிரமங்களுக்கு ஒரு அளவே இல்லையா? ஏற்கனவே இந்த ஏற்பாடு வெற்றிகரமாக நடந்து வருவதால், அப்படியே தொட்டுருவோம்னு முடிவு பண்ணிட்டானுங்களோ?
ஐயோ பாவம் இவன்
மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு பொதுவாக ‛என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையில் ஒரு நடிகர் கம் அரசியல்வாதியுடன் நெருக்கமான நட்பில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை அவர் மறுத்தார். இந்த நிலையில் நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், தான் மணந்து கொள்ள இருக்கும் மணமகனை அறிமுகப்படுத்தினார்.
மணமகனின் பெயர் ரஜித் இப்ரான். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழில் அதிபரும் கூட. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுலேயும் பினாமியா? உங்க அக்கிரமங்களுக்கு ஒரு அளவே இல்லையா? ஏற்கனவே இந்த ஏற்பாடு வெற்றிகரமாக நடந்து வருவதால், அப்படியே தொட்டுருவோம்னு முடிவு பண்ணிட்டானுங்களோ?
ஐயோ பாவம் இவன்